பாதுகாப்பு அம்சங்கள் கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் காணப்படுகின்றன.
இதனால் பலரும் குறித்த கைப்பேசிகளை விரும்பி கொள்வனவு செய்கின்றனர்.
எவ்வாறெனினும் ஒரு ஐபோனில் ஒரு பயனரின் கணக்கினை மாத்திரமே கையாள முடியும்.
ஆனால் விரைவில் ஒன்றிற்கு மேற்பட்ட பயனர்கள் ஒரே கைப்பேசியில் கணக்குகளை வைத்திருந்து பயன்படுத்தக்கூடிய வசதியினை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
இவ் வசதியானது Secure Enclave என அழைக்கப்படுகின்றது.
தற்போது உள்ள கணினிகளில் பல பயனர்கள் வெவ்வேறு கணக்குகளின் ஊடாக லொக்கின் செய்து பயன்படுத்தும் வசதி காணப்படுகின்றது.
இவ்வாறானதொரு வசதியையே ஐபோன்களில் தர ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
இவ் வசதியின் ஊடாக தமது கோப்புக்களை வெவ்வேறு பயனர்கள் ஒரே ஐபோனில் பாதுகாப்பாக பேண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.