ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடத்தின் பிற்பகுதியில் iPhone 12 எனும் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
உலக அளவில் சுமாராகவே இக் கைப்பேசியின் விற்பனை காணப்படுன்றது.
ஆனால் சீனாவில் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது கடந்த வருட இறுதிக் காலாண்டுப் பகுதியில் சுமார் 18 மில்லியன் iPhone 12 விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது வழமையை விடவும் 20 சதவீத அதிகரிப்பை காண்பிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பெருமளவானவர்கள் கைப்பேசி கொள்வனவில் ஆர்வம் காட்டவில்லை.
ஆனாலும் சீனாவில் இந்த நிலைமை மாறிக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.