மீண்டும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாவின் பெறுமதி!

Report Print Vethu Vethu in பணம்

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சற்று அதிகரிப்பை வெளிப்படுத்திய இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது

அதற்கமைய அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 184.3 ரூபாயாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் கொள்வனவு விலை 180.6 ரூபாயாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் டொலருக்கான கேள்வி அதிகரித்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக துறைசார் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்