மீண்டும் வளர்ச்சி அடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

Report Print Vethu Vethu in பணம்

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 0.6 வீதத்தில் வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் தகவலுக்கமைய நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.41 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 179.54 ரூபாவாக பதிவாகியுள்ளது.

2018ஆம் ஆண்டு டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி 16.4 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

எனினும் தற்போது இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வலுவடைந்து வருவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers