ஸ்திரமான நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி!!

Report Print Vethu Vethu in பணம்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியை ஸ்திரமான நிலையில் பேண அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக வலுவான வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பிரதியமைச்சர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.

சமகாலத்தில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான நிலையை எட்டியுள்ளது. அதனை தொடர்ந்தும் வலுவான நிலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதியமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

கடந்த வருடம் முழுவதும் இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியை சந்தித்திருந்தது. எனினும் கடந்த மாதத்திலிருந்து ரூபாவின் பெறுமதி வலுவான நிலையை நோக்கி செல்வதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்திற்கு அமைய ரூபாவின் பெறுமதியில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்