பட்டர்ஃப்ளை கதவு வசதியுடன் அறிமுகமாகும் Fisker Karma கார்

Report Print Givitharan Givitharan in வாகனம்

உலகிலுள்ள தலைசிறந்த கார் வடிவமைப்பு நிறுவனங்களுள் Fisker Automotive நிறுவனமும் ஒன்றாகும்.

இந்த நிறுவனம் 2007ம் ஆண்டு Henrik Fisker என்பவரால் நிறுவப்பட்டது.

ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாகக் கொண்டு செயற்படும் இந்த நிறுவனம் அதிகளவில் ஸ்போர்ட்ஸ் ரக கார்களையே வடிவமைத்துவருகின்றது.

இவற்றின் வரிசையில் Fisker Karma எனும் புத்தம் புதிய காரை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இக் காரின் விசேட இயல்பாக Butterfly Door எனும் வசதி தரப்படவுள்ளது.

இவ் வசதியின் ஊடாக காரின் கதவுகள் இரண்டு புறமாகவும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகுகள் போன்று திறக்கக்கூடியதாக இருக்கும்.

இது தொடர்பாக ஒரு புகைப்படம் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் ஏனைய சிறப்பம்சங்கள் தொடர்பான எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments