வாகனங்களின் விலைகளில் அதிரடி மாற்றம்..! விபரம் உள்ளே

Report Print Murali Murali in வாகனம்

வரவு செலவுத் திட்ட திருத்தத்தின் பிரகாரம், சில வாகனங்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஆயிரம் குதிரை வலு என்ஜனை கொண்ட பெற்றோர் கார்களுக்கான வரி 250 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்சிகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மருத்தி ரக கார்களின் விலை சுமார் இரண்டு லட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1800 – 2000 ரகத்திற்கு சொந்தமான ஐபிரிட் ரக கார்களுக்கான வரி 500 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன்படி எக்செல் ரக கார்களின் விலை 10 லட்சம் ரூபாவினால் உயர்வடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலத்திரனியல் கார்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளமையினால், லீப் ரக கார்களின் விலைர 3 முதல் 4 லட்சம் ரூபா வரை குறைவடைந்துள்ளது.

ஐபிரிட் ரக கார்களின் ஆகக்குறைந்த விலை 45 லட்சம் ரூபா வரை குறையும் என எதிர்பார்க்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டபள் கெப் வாகனங்களுக்கு 50 வீத வரி குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments