லண்டன் டூ நியூயார்க்... வெறும் 3 1/2 மணிநேரத்தில்! வருகிறது அசத்தலான விமானம்

Report Print Fathima Fathima in வாகனம்

லண்டனிலிருந்து நியூயார்க் நகருக்கு வெறும் 3 1/2 மணிநேரத்தில் செல்லக்கூடிய விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் ஒலியை விட வேகமாக செல்லக்கூடிய Concorde விமானத்தை விட வேகமாக செல்லக்கூடியதாகும்.

Virgin Group, Boom Technologies இணைந்து வடிவமைத்துள்ள குறித்த விமானத்துக்கு XB-1 Supersonic Demonstrator (Baby Boom) என பெயரிட்டுள்ளனர்.

மணிக்கு 1,451 மைல் வேகத்தில் செல்லக்கூடிய இந்த விமானத்தில் 48 பேர் பயணம் செய்யலாம்.

அடுத்த வருட இறுதியில் சோதனை ஓட்டம் நடைபெறலாம் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த விமானத்தால் 60,000 அடி உயரத்தில் பறக்க முடியும் என கூறப்படுகிறது.

மேலும் பயணிகள் விமானத்தில் பறந்து கொண்டே பூமியின் வளைவை காணமுடியும் எனவும் கூறப்படுகிறது.

Boom Technology

Boom Technology

Boom Technology

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments