BMW வகை கார்களின் அடுத்த சூப்பர் மொடல் இது தான்

Report Print Raju Raju in வாகனம்

விலை உயர்ந்த ஆடம்பர கார்களை தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் ஜேர்மனி நாட்டின் BMW கார் நிறுவனமானது மின்சாரத்தில் இயங்க கூடிய BMW i3 வகை கார்களை கடந்த 2014 ஆண்டில் அறிமுகம் செய்தது.

இப்போது இதே கார்களை பல புதிய வசதிகளுடன் மேம்படுத்தி அடுத்த வருடம் விற்பனைக்கு கொண்டு வர BMW நிறுவனம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது சந்தையில் இருக்கும் BMW i3 கார்கள் 300 கி.மீ வேகத்தை கொடுக்கிறது. இதன் மேம்படுத்தப்பட்ட கார்களில் இந்த கி.மீ வேகம் கணிசமாக அதிகப்படுத்தப்படும் என தெரிகிறது.

அதே போல வரவிருக்கும் அட்வான்ஸ்ட் மொடலில் பேட்டரி தரம் அதிக அளவில் உயர்த்தப்படும் என அறியப்படுகிறது. மேலும் சில புதிய நிறங்களிலான கார்களை விற்பனைக்கு விடவும் BMW கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த மேம்ப்படுத்தப்பட்ட BMW i3 கார்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிப்பார்க்கபடுகிறது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments