ஹோண்டா நிறுவனத்தின் அடுத்த 2 சூப்பர் பைக்குகள் அறிமுகம்

Report Print Raju Raju in வாகனம்

இரு சக்கர வாகனம் மற்றும் கார்கள் தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் ஹோண்டா நிறுவனமானது ரீபில் 300 மற்றும் ரீபில் 500 என இரண்டு புதிய இருசக்கர வாகனங்களை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹோண்டா ரீபில் 300 மற்றும் ரீபில் 500 இரண்டுமே பல வகையான சிறப்பம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ரீபில் 300 cc மொடலில் CBR300 தரத்திலான இன்ஜீன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் நீரால் இயந்திரமும், ஒற்றை சிலிண்டரும் உள்ளது.

இந்த ரீபில் 300 மொடல் 165 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ரீபில் 500 cc மொடலை எடுத்து கொண்டால் அது CBR500 தரத்திலான இன்ஜினை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. திரவ குளிர்ந்து நீராவி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ரீபில் 500 மொடலின் எடை 185 கிலோ ஆகும்.

புதிதாக இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் கூட இந்த இரு மொடலையும் எளிதாக கையாள முடியும் என ஹோண்டா நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்காவில் வெளியாகியிருக்கும் இந்த வகை இரு சக்கர வாகனங்கள் அடுத்து வேறு எந்த நாடுகளில் வெளியாகும் என்ற விபரங்கள் எதையும் ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments