உதயமாகிறது உலகின் அதிவேக தானியங்கி கார்

Report Print Aravinth in வாகனம்

உலகில் ஒவ்வொரு கார் நிறுவனங்களும் தாங்கள் தயாரிக்கும் கார்களில் பல புதுமைகளை புகுத்தி வருகிறது.

இந்நிலையில், கார் தயாரிப்பில் முன்னணி வகித்து வரும் நிறுவனங்களில் ஒன்றான Faraday தற்போது உலகின் அதிவேக தானியங்கி கார்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த அதிவேக தானியங்கி காரை தயாரிக்கும் பணியானது கடந்த 2016 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டுவிட்டது.

இதுகுறித்து நிறுவனத்தின் தலைவர் கூறியதாவது, இந்த காருக்கு FF 91 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த காரில், சக்தி வாய்ந்த 1050 horsepower கொண்ட என்ஜின்கள் பொருத்தப்படவுள்ளது.

இதனால், இந்த காரானது, 2.40 வினாடிகளில் 0-100கி.மீ. வேகத்தை தொட்டுவிடும்.

மேலும், இந்த காரில் Face Recognition ஆப்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், காரின் கதவை திறப்பது, மூடிக்கொள்வது சுலபமாகும்.

இந்த காரின் மாதிரியை ஏற்கனவே Faraday நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த மாதிரிப் படத்தில், அயர்ன் மேன் நெஞ்சில் இருப்பதுபோலவே பூம் லைட் கொடுக்கப்பட்டு மிகவும் ஸ்டைலாக இருக்கிறது.

இதைத் தொடர்ந்து, இந்தக் அதிவேக தானியங்கி காரானது அடுத்தாண்டில் தான் விற்பனைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments