அட்டகாசமான தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் மோட்டார் சைக்கிள்

Report Print Givitharan Givitharan in வாகனம்

ஜப்பான் நிறுவனமான ஹொண்டா ஆனது உலகத்தரம் வாய்ந்த மோட்டார் சைக்கிள்களை வடிவமைத்து அறிமுகம் செய்வது தெரிந்ததே.

உலக அளவில் இந் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்களுக்கு அதிக கேள்வி காணப்படும் நிலையில் தற்போது இரு புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக ஒரு மோட்டார் சைக்கிளை வடிவமைத்துள்ளது.

அதாவது சிறந்த நிலையில் சுய சமநிலையைப் பேணக்கூடியதாக இருப்பதுடன், தன்னிச்சையாக இயங்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

இவ்வாறான ஒரு மோட்டார் சைக்கிளை வடிவமைக்கவுள்ளதாக 2016ம் ஆண்டு இடம்பெற்ற Consumer Electronics Show ஹொண்டா நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதற்கமைய இந்த வாரம் இடம்பெறும் 2017ம் ஆண்டிற்கான Consumer Electronics Show நிகழ்வில் குறித்த மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தன்னிச்சையாக இயங்கக்கூடிய தொழில்நுட்பத்திற்கு Honda Riding Assist எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இத் தொழில்நுட்பமானது ஹொண்டா நிறுவனத்தின் ASIMO ரோபோக்களின் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments