நீரிலும், நிலத்திலும் செல்லும் விமானம்: சீனாவின் புதிய உருவாக்கம்

Report Print Thayalan Thayalan in வாகனம்

சீனா பறந்து கொண்டிருக்கும் போதே நிலத்திலும், நீரிலும் தரையிறங்கக்கூடியதான, பிரமாண்டமான விமானம் ஒன்றை தயாரித்துள்ளது.

சீன அரசானது, நிலத்திலும், வானிலும் செல்லக் கூடிய அதிநவீன விமானத்தை உருவாக்கியுள்ளது. இதனுடாக தென்சீனக் கடல் பகுதியில் தனது ராணுவ பலத்தை மேம்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

குறித்த விமானத்திற்கு AG600 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த விமானம் 37 மீற்றர் நீளமும், 38.8 மீட்டர் நீளமுள்ள இறக்கைகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இடைவிடாமல் 4500 கி.மீ தூரம் வரை பறக்கும் இந்த விமானம், ஒரே நேரத்தில் 53.5 டன் எடையை சுமந்து செல்வதோடுஇ 20 டன் நீரையும் சுமந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நடுக்கடலில் ஏதேனும் கப்பல் விபத்து ஏற்படும் சமயத்தில் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையிலும், நிலப் பரப்பில் ஏற்படும் தீயை அணைக்கும் வகையிலும் இவ்விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சீன ராணுவப் பொறியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இவ் அதிநவீன விமானமானது, இந்த வருடத்தின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, விரைவில் சீன இராணுவத்தில் இணைக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கத்து .

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments