சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சூரிய ஆற்றல் கார்கள்

Report Print Kabilan in வாகனம்

சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் பேட்டரில் இயங்கும் கார்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில் தற்போது சூரிய ஆற்றலில் இயங்கும் கார்களின் தயாரிப்பும் அதிகரித்து வருகிறது.

இயற்கை ஆற்றலான சூரிய ஒளியை பயன்படுத்தி வாகனங்களை தயாரிக்கும் தொழில்நுட்பம் பிரபலமாகி வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக அவுஸ்திரேலியாவில் சூரிய மின்னாற்றலின் இயங்கும் கார்களுக்கான போட்டி நடைபெற்றது, அடிலெய்டு நகரில் நடந்த இந்த போட்டியில் மொத்தம் 41 கார்கள் இதில் பங்கேற்றன.

மொத்த பந்தய தூரமான மூன்றாயிரம் கிலோ மீட்டரை நெதர்லாந்தைச் சேர்ந்த நுனா 9 எனும் கார் கடந்து முதல் பரிசை வென்றது.

81 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்தக் கார் ஒருவர் மட்டுமே பயணிக்கவல்லது.

நெதர்லாந்து அணியே ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றது. இக்குழுவே சிறப்பான முறையில் காரின் வடிவமைப்பு மற்றும் அதில் பயன்படுத்தப்பட்டிருந்த பொருட்கள் ஆகியவற்றை செய்திருந்ததால் முதல் பரிசைத் தட்டிச் சென்றது.

ஸ்டெல்லா வைய் எனும் கார் ஐந்து பேர் பயணிக்கும் வகையில் மணிக்கு 69 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியதாகும்.

சூரிய ஆற்றல் கார்களை வெட்ட வெளியில் நிறுத்தலாம், ஏனெனில் இதன் மேலுள்ள சூரிய தகடுகள் மூலம் மின்சாரம் உறபத்தியாகி இதிலுள்ள பேட்டரி சார்ஜ் ஆகும்.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்