இந்தியாவில் விரைவில் வரவிருக்கும் அதிவேக மின்சார கார்கள்

Report Print Kabilan in வாகனம்
17Shares
17Shares
ibctamil.com

சுமார் 300 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக மின்சார கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளன.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எரிபொருள் நிரப்பும் கார்களின் வரத்து குறைந்து மின்சார கார்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வருகின்றன.

இந்த மின்சார கார்கள் ஒலி எழுப்பாது, எடை குறைவானது, பயன்பாட்டிற்கு மிகவும் இலகுவாக இருக்கும்.

தற்போது இந்தியாவில் மஹிந்திரா E20 மற்றும் E-வெரிடோ ஆகிய மின்சார கார்கள் பயன்பாட்டில் உள்ளன.

150 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய டிகோர் மின்சார கார்கள் அடுத்த ஆண்டும், 300 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய மின்சார கார்கள் 2019ம் ஆண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளன.

டாடா டியகோ மற்றும் டைகோர் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் 10,000 மின்சார கார்களை இந்திய அரசுக்கும், பிற நிறுவனங்களுக்கும் இம்மாதம் முதல் வழங்க உள்ளன.

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்டப் நிறுவனம் எம்-ஸீரோ என்னும் ஸ்போர்ட்ஸ் காரை தயாரித்து வருகிறது. இதன் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும்.

டெஸ்லா நிறுவனத்தின் மின்சார காருக்கு இந்தியாவில் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். ரூ.40 லட்சம் மதிப்புள்ள இந்த கார் 2019ம் ஆண்டு விற்பனைக்கு வர உள்ளது.

மேலும், ஆட்டோ எக்ஸ்போவினால் கடந்த 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிஸான் லீஃப் என்னும் கார் விரைவில் இந்தியாவிற்கு விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400கி.மீ வரை பயணிக்கலாம்.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்