ஜேர்மனியில் புதுமையான வாகனம் அறிமுகம்

Report Print Vethu Vethu in வாகனம்
19Shares
19Shares
ibctamil.com

ஜேர்மனியில் சாரதி இன்றி பயணிக்க கூடிய புதிய வாகனம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.

EZ10 என்ற பெயரில் இந்த வாகனம் அழைக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய வகை வாகனத்தில் சுமார் 10 பேர் பயணிக்க முடியும்.

இதன் ஆரம்ப பரிசோதனை பயணம் ஜேர்மனில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அது வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சாரதி ஒருவரின்றி இந்த வாகனம் வீதியின் சரியான பாதையில் பயணிப்பற்கு ஜீ.எஸ்.பீ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

EZ10 ரக வாகனம் எதிர்வரும் காலங்களில் ஜேர்மனியின் குறுகிய தூர பயணங்களுக்காகவும், பொது போக்குவரத்து கட்டமைப்பிற்கும் இணைத்து கொள்வதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்