பணத்தை அதிகமாக மீதப்படுத்தி தரக்கூடிய புதிய எலக்ட்ரோனிக் ஸ்கூட்டர்

Report Print Givitharan Givitharan in வாகனம்
47Shares

இத்தாலியை தளமாகக் கொண்டு இயங்கும் முன்னணி ஸ்கூட்டர் வடிவமைப்பு நிறுவனமான Vespa புதிய எலக்ட்ரோனிக் ஸ்கூட்டர் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ள இந்த ஸ்கூட்டர் 50 சிசி கொள்ளளவுடைய இன்ஜினை உள்ளடக்கியுள்ளது.

மேலும் தொடர்ச்சியக 2 கிலோ வாட்ஸ் மின்சாரத்தினை வழங்கக்கூடிய வலுப் பொதி தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு முறை சார்ஜ் செய்து 62 மைல்கள் வரை பயணம் செய்ய முடியும்.

தவிர இதனுடன் இணைக்கப்பட்ட மின்கலத்தினை நான்கு மணி நேரத்திலேயே பூரணமாக சார்ஜ் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்