BMW i8 Roadster கார் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

Report Print Givitharan Givitharan in வாகனம்

ஆடம்பர கார்களை வடிவமைத்து அறிமுகம் செய்யும் BMW நிறுவனம் தனது புத்தம் புதிய கார் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

BMW i8 Roadster எனும் இப் புதிய கார் ஓய்விலிருந்து மணிக்கு 62 மைல்கள் எனும் வேகத்தினை 4.6 செக்கன்களில் எட்டவல்லது.

இதன் உடற்பாகங்கள் அலுமினியம் மற்றும் கார்பன் நார்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் eDrive எனும் தொழில்நுட்பமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அதியுயர் மின்னழுத்த வேறுபாடு கொண்ட மின்கலமும் தரப்பட்டுள்ளது.

இக் காரானது 2019ம் ஆண்டிலேயே விற்பனைக்கு வரவுள்ளது.

மிகவும் கவர்ச்சிகரமானதாக காணப்படும் குறித்த காரின் விலை 150,000 டொலர்கள் ஆகும்.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers