வாகன இறக்குமதியால் ஆபத்து? விசாரணைக்கு உத்தரவிட்ட டொனால்டு டிரம்ப்

Report Print Raju Raju in வாகனம்
69Shares
69Shares
lankasrimarket.com

வாகனங்கள் இறக்குமதியால் உள்நாட்டு பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதார வலிமைக்கு வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் போன்ற முக்கிய துறைகள் மிகவும் இன்றியமையாதவையாக உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதனால், நாட்டின் பாதுகாப்பிற்கு டிரக் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் இறக்குமதி அச்சுறுத்தலாக உள்ளதா என்பது குறித்து விசாரிக்க, வர்த்தக துறை அமைச்சர் வில்பர் ராசுக்கு உத்தரவிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் கனடா, மெக்சிகோ, சீனா, ஜேர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்