உலகிலேயே குறைந்த எடை கொண்ட Electric Scooter-ஐ அறிமுகப்படுத்திய பிரித்தானிய நிறுவனம்

Report Print Kabilan in வாகனம்
83Shares

பிரித்தானியாவின் Hummingbird நிறுவனம் உலகிலேயே எடை குறைந்த Electric Scooter-ஐ உருவாக்கியுள்ளது.

இருசக்கர வாகன தயாரிப்பில் பிரபலமான பிரித்தானியாவின் Hummingbird நிறுவனம், உலகிலேயே எடை குறைந்த Electric Scooter ஒன்றை உருவாக்கியுள்ளது. மடித்து வைக்கும் வகையிலான இந்த Electric Scooter-யின் மொத்த எடையே 10.3 கிலோ தான்.

இந்த Scooter-யில், 250 வாட்ஸ் பேட்டரி திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் 25 கிலோ மீற்றர் ஆகும். ஒரு முறை Charge செய்தால், 30 கிலோ மீற்றர் தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த Electric Scooter குறித்து அதனை தயாரித்த பீட்டர் கூறுகையில், ‘இந்த Hummingbird Electric Scooter-யில் Bluetooth மூலம் Riders தங்கள் ஸ்மார்ட்போனை பிட் ரைடு ஆப் மூலம் இணைத்துக் கொள்ளலாம்.

அதன்மூலம் அந்த செயலி டயகனசிஸ், வாகனத்தின் திசையை பொருத்த Navigation, Mobility மற்றும் முக்கிய அம்சமாக உங்கள் வாகனம் திருடு போனால், பின்பக்க சக்கரம் சுழற்றாமல் இருக்கும் வகையிலான Lock ஆகிய வசதிகள் இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்