நிறம் மங்காத கார்களை வடிவமைக்கும் Nissan நிறுவனம்

Report Print Givitharan Givitharan in வாகனம்

உலகத்தரம்வாய்ந்த கார்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களுள் Nissan உம் ஒன்றாகும்.

இந்நிறுவனம் தற்போது புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளது.

அதாவது இதுவரை கார்களில் பயன்படுத்தப்படும் வர்ணங்கள் அதிகளவு சூரிய வெளிச்சம் படும்போது மங்கும் தன்மை கொண்டன.

ஆனால் எந்தவொரு நிலையிலும் மங்காத வர்ணத்தை கார்களுக்கு பூசுவதற்கான முயற்சியில் வெற்றிகண்டுள்ளது.

இதற்காக Xenon Weather-Ometer (XWO) எனும் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தவுள்ளனர்.

சுமார் 4,000 வாட்ஸ் உயை செனன் மின்குமிழைப் பயன்படுத்தி காருக்கு பூசப்படும் வர்ணம் ஒத்திசைவாக்கம் செய்யப்படும்.

இதன்காரணமாக UV கதிர்கள் பட்டு தெறிக்கும் ஆற்றலைப் பெறும்.

எனவே சூரிய வெளிச்சத்தினால் கார்களின் வர்ணம் மங்கலடையாது.

ஆறு மாத கால முயற்சிக்கு பின்னர் இத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers