குறுகிய காலத்தில் ஒன்லைன் ஊடான போக்குவரத்து சேவையில் பிரபல்யமான நிறுவனமாக ஊபர் விளங்குகின்றது.
பல நாடுகளிலும் கட்டணம் செலுத்தப்பட்ட டாக்ஸி சேவையினை வழங்கிவரும் இந்த நிறுவனம் தனது சாரதிகளின் பயணிகள் மீதான அத்துமீறல்களினால் பல சர்ச்சைகளையும் எதிர்நோக்கியிருந்தது.
எனினும் தொடர்ந்தும் வெற்றிகரமாக சேவையினை வழங்கிவரும் குறித்த நிறுவனம் தற்போது தானியங்கி முறையில் பயணிக்கக்கூடிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் என்பவற்றினை வடிவமைத்து அறிமுகம் செய்யவுள்ளது.
இதற்கு முன்னர் கூகுள் உட்பட மேலும் சில நிறுவனங்கள் தானியங்கி கார்களை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தன.
ஆனால் இக் கார்கள் பரிசோதனையின் போது விபத்துக்களை ஏற்படுத்தியிருந்தமையினால் அத்திட்டங்கள் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இப்படியான ஒரு நிலையிலேயே ஊபர் நிறுவனம் இம் முயற்சியில் இறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.