பயணிகளின் பாதுகாப்பிற்காக 3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யும் ஊபர்

Report Print Givitharan Givitharan in வாகனம்
129Shares

ஊபர் நிறுவனத்தினால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்லைன் வாடகைக் கார் சேவையில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் பலத்த விமர்சனங்கள் காணப்பட்டன.

இவற்றினையெல்லாம் தாண்டி தொடர்ந்தும் வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கும் ஊபர் பயணிகளின் பாதுகாப்பிலும் அக்கறை செலுத்தி வருகின்றது.

இந்நிலையில் இதற்காக 3 புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.

இவற்றில் ஒன்று குரல் பதிவு செய்யும் வசதியாகும்.

இதன்படி பயணி மற்றும் சாரதி இருவரும் வாகனத்தில் நடைபெறும் உரையாடல்களை பதிவு செய்துகொள்ள முடியும்.

பயணிக்கோ அல்லது சாரதிக்கோ அசௌகரியம் ஏற்படும்பேது இதனை ஆதாரமாக பயன்படுத்த முடியும்.

அடுத்தது PIN வசதியாகும். பயணத்தினை ஆரம்பிக்கும் போது பயணிக் வழங்கப்படும் PIN இலக்கத்தினைக் கொண்டு ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

எனினும் இது அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தது RideCheck வசதியாகும்.

இதன்மூலம் ஊபர் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவானது பயணத்தினை அவதானித்து அதன் ஏற்பாடுகள் மற்றும் ஏனைய பாதுகாப்புக்கள் குறித்து கண்காணிக்கும்.

மேற்கண்ட இரு வசதிகளும் ஏற்கனவே OLA ஒன்லைன் வாடகை வாகன சேவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்