பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்யும் பிரித்தானியா: எப்போது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in வாகனம்

எலக்ட்ரிக் கார்களின் வருகையை தொடர்ந்து பல நாடுகள் பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்யும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

சூழல் பாதிப்பை தடுப்பதே இந்நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.

இந்நிலையில் பிரித்தானியாவும் மேற்கொண்ட வாகனங்கள் உட்பட ஹைபிரிட் வானங்களையும் தடை செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 2035 ஆம் ஆண்டு முதல் இத் தடை நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

காபனீரொட்சைட் அதிகரிப்பு மற்றும் காலநிலை மாற்றங்களில் இவ் வகை வானங்கள் அதிக செல்வாக்கு செலுத்துகின்றன எனவும் இது தொடர்பான மாநாடு ஒன்றினை நடாத்த ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மாநாடு எதிர்வரும் நொவெம்பர் மாதமளவில் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்