டக்ஸி புக்கிங் சேவையை இடைநிறுத்தியது ஊபர்

Report Print Givitharan Givitharan in வாகனம்

ஊபர் நிறுவனம் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் தனது டக்ஸி புக்கிங் சேவையை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த இடைநிறுத்தல் ஆனது சவுதி அரேபியாவிற்கு மாத்திரம் செல்லுபடியானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு 344 வரையான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதனை அடுத்த ஊபர் நிறுவனம் இந்த அறிவித்தலை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

எனினும் ஊபர் சாரதிகள் தனிப்பட்ட ரீதியில் தமது சொந்த வாகனங்களை பயன்படுத்தி பயணிகளுக்கான சேவையை வழங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி ஊபரின் உணவு டெலிவரி சேவையும் இதுவரை பாதிக்கப்படவில்லை எனவும் அறிவித்துள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்