மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கும் ஊபர் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in வாகனம்
113Shares

கொரேனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல நாடுகளில் லொக்டவுன் முறை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இதன் காரணமாக ஒன்லைன் வாடகை வாகன சேவையினை வழங்கிவரும் ஊபர் நிறுவனத்திற்கும் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருந்தது.

எனினும் தற்போது லொக்டவுன் உள்ள இடங்களிலும் பல தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் ஏனைய நிறுவனங்களைப் போன்று ஊபர் நிறுவனமும் தனது சேவைகளை படிப்படியாக ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 31 நகரங்களில் தனது சேவையை மீள ஆரம்பிக்க ஊபர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவற்றுள் Gurugram, Amritsar, Chandigarh, Faridabad, Ghaziabad, Guwahati, Kochi, Udaipur, Vapi மற்றும் Visakhapatnam போன்ற நகரங்களும் அடங்குகின்றன.

இதனைத் தொடர்ந்து ஏனைய நகரங்களிலும் ஊபர் நிறுவனம் தனது சேவையை மீள ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்