ஒரு நபரை ஏற்றியவாறு வெற்றிகரமாக பயணம் செய்த பறக்கும் கார்

Report Print Givitharan Givitharan in வாகனம்
927Shares

பறக்கும் கார்களை உருவாக்குவது உலக நாடுகளின் பல தசாப்த கால கனவாக இருக்கின்றது.

இந்நிலையில் அண்மையில் பறக்கும் கார் உருவாக்கப்பட்டு பரிசீலிப்பிற்கும் உட்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் இதன்போது கார் தனியாகவே பறக்கவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஜப்பானின் SkyDrive Inc நிறுவனம் பறக்கும் கார் பரீட்சிப்பில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

அதாவது நபர் ஒருவரை ஏற்றியவாறு பறக்கவிடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இப் பரீட்சிப்பில் ஒன்று தொடக்கம் 2 மீட்டர்கள் உயரம்வரை இவ்வாறு பறந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள SkyDrive Inc நிறுவனத்தின் தலைவரான Tomohiro Fukuzawa எதிர்வரும் 2023 ஆம் ஆண்டளவில் இப் பறக்கும் கார்கள் மக்களின் பாவனைக்காக அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்