லண்டனில் மீண்டும் அனுமதிப் பத்திரத்தினை பெற போராடும் ஊபர்

Report Print Givitharan Givitharan in வாகனம்
196Shares

உலக அளவில் பல நாடுகளில் ஒன்லைன் வாடகை வாகன சேவையை வழங்கிவரும் நிறுவனமாக ஊபர் காணப்படுகின்றது.

இந்த நிறுவனத்தின் சேவைக்கு அண்மையில் லண்டனில் தடை விதிக்கப்பட்டது.

பாதுகாப்பு பொறிமுறைகளில் உள்ள குறைபாடுகள் காணரமாக இத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

லண்டனில் சுமார் 45,000 சாரதிகளை ஊபர் நிறுவனம் கொண்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் தனது சேவையை அங்கு வழங்குவதற்கு ஊபர் நிறுவனம் எத்தனித்து வருகின்றது.

இதற்காக அனுமதிப்பத்திரத்தினை பெறுவதற்காக நீதிமன்றங்களை நாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இது சாத்தியப்படுமா என்பது தொடர்பில் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்