இந்த வகையான கார்களுக்கு விரைவில் தடை: எங்கு? எப்போது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in வாகனம்

எரிபொருட்களின் பயன்படுத்தப்படும் வாகனங்களால் உலகில் அதிகளவான மாசு உண்டாகியுள்ளது.

இதன் காரணமாக தற்போது மின்சக்தியில் இயங்கும் இலத்திரனியல் கார்களுக்கே அதிக முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது.

இப்படியிருக்கையில் எரிவாயுக்களிலும் (Gas) இயங்கும் கார்களுக்கும் விரைவில் தடை வரவுள்ளது.

இந்த தடையானது கலிபோர்னியாவில் ஏற்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 2035 ஆம் ஆண்டிலிருந்து இத் தடை நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என கலிபோர்னியாவின் ஆளுனர் Gavin Newsom தெரிவித்துள்ளார்.

இவ்வாறான மாசுக்களாலேயே அண்மையில் கலிபோர்னியா, ஒரிகன் மற்றும் வாசிங்டனில் 5 மில்லியன் ஏக்கர் கணக்கான நிலப் பரப்பில் காட்டுத் தீ ஏற்பட்தாகவும், இதன்போது டசின் கணக்கானவர்கள் இறந்துள்ளமையையும் அவர் நினைவுகூர்ந்தார்.

அத்துடன் 2035 ஆண்டின் பின்னர் வாகனப் புகையினால் ஏற்படும் மாசு பூச்சியமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்