Toyota நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு: திக்குமுக்காடப்போகும் ஏனைய நிறுவனங்கள்

Report Print Givitharan Givitharan in வாகனம்
852Shares

தற்போது எரிபொருள் ரக வாகனங்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கே பிரபல நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் தற்போது எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது.

இப்படியான நிலையில் ஜப்பானின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான Toyota புதிய அறிவிப்பு ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி தனது SUV ரக எலக்ட்ரிக் கார்கள் அனைத்தையும் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதாவது இவை அனைத்தும் மின்கலங்களில் இயங்கும் கார்களாக இருக்கப்போகின்றன.

இந்த தகவலானது ஏனைய கார் வடிவமைப்பு நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக விளங்கப்போகின்றது.

அத்துடன் இப் புதிய கார்கள் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்