ஆப்பிளின் முதலாவது தானியங்கி கார் இப்படித்தான் இருக்குமாம்: வெளியான புதிய தகவல்

Report Print Givitharan Givitharan in வாகனம்
0Shares

ஆப்பிள் நிறுவனம் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் தானியங்கி கார்களை வடிவமைக்கும் பணியினை ஆரம்பித்திருந்தது.

எனினும் பின்னர் இப் பணியினை முற்றாக கைவிட்டிருந்தது.

இப்படியான நிலையில் கடந்த வருட இறுதியில் மீண்டும் தானியங்கி கார்களை வடிவமைக்கப்போவதாகவும், 2024 ஆம் ஆண்டில் குறித்த கார்கள் பாவனைக்கு வரும் எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது குறித்த கார்கள் தொடர்பில் மற்றுமொரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது இக் கார்கள் முற்று முழுதாக தானியங்கி முறையிலேயே இயங்கும் எனவும், சாரதிகளின் பயன்பாடு அறவே இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தானியங்கி வாகனத் தயாரிப்புக்கு ஆப்பிள் நிறுவனம் Project Titan என பெயர் சூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்