பூமி மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கிறது! அதிர்ச்சியளிக்கும் உண்மை புகைப்படங்களுடன்

Report Print Raju Raju in இயற்கை
1098Shares

750 கோடி ஜனத்தொகையுடன் இந்த உலகமானது தற்போது இயங்கி வருகிறது.

நாம் சாப்பிடுகிறோம், வாழ்க்கையை பல விதங்களில் அனுபவிக்கிறோம். ஆனால் எத்தனை பேர் இந்த பிரபஞ்சத்தை பற்றி கவலைப்படுகிறோம்?

இந்த பூமியானதுஅழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்? சரி என்னென்ன பிரச்சனைகளை இந்த கிரகமும் பூமியும் சந்தித்து வருகின்றது?

அதிகப்படியான மீன்களை பிடித்தல்

2050 ஆண்டுக்குள் மீன்களே உலகில் இருக்காது என ஒரு ஆய்வு கூறுகிறது. ஜனத்தொகை அதிகரித்து கொண்டே இருக்கிறது என்ற எச்சரிக்கை மணியே மீன்களின் அழிவு நமக்கு உணர்த்துகிறது. மனிதனாலும், ரசாயன கலப்புகள் கடலில், ஆறுகளில் கலப்பதாலும் மீன்கள் பெருமளவில் இறக்கின்றன.

அழிந்து வரும் காடுகள்

இயற்கையின் கொடையான காடுகள், வனங்கள் அழிந்து வருகின்றன மற்றும் அழிக்கப்படுகின்றன. காட்டு மரங்களை வெட்டுவது, காட்டை வெட்டி அந்த நிலத்தை தரிசாக மாற்றுவதெல்லாம் காடழிப்பாகும். காடுகள் அழிக்கப்படுவதால் இயற்க்கையாகவே தட்ப வெட்பங்கள் மாறி மழையானது பொழியாமல் பொய்க்கிறது.

டயரை கொளுத்துதல்

டயரை கொளுத்துவதால் அந்த மாசு புகையானது பூமிக்கு தீங்கு விளைவிக்கிறது, மனித உடலுக்கு கேடு தருகிறது.

போர்கள் மற்றும் கலவரங்கள்

மனித நேயம் மறுத்து விட்டது என்பதற்கு எடுத்துகாட்டாய் எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்பு, கலவரங்கள் நடக்கிறது. உலக போரிலிருந்து இன்று வரை பல லட்சம் மக்கள் இதனால் இறக்கிறார்கள்.

புகை மண்டலம்

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் எங்கு பார்த்தாலும் மாசு புகைகள் என திண்டாடி வருகிறது அந்நாடு.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments