வினோத இயல்பைக் கொண்ட பாம்பினம் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in இயற்கை

பாம்புகள் தமது உணவினை உடனே விழுங்கிக்கொள்ளும் ஆற்றல் கொண்டனவாகவே காணப்படுகின்றன.

இவற்றிற்கு தாடை இல்லாமையே உணவுகளை சேமித்து வைத்து விழுங்கிக்கொள்ள முடியாமைக்கு காரணமாக விளங்குகின்றது.

எனினும் இவை கடினமான உணவுப் பொருட்களைக் கூட இலகுவாக விழுங்கி சமிபாடடையச் செய்துவிடும்.

ஆனால் தென்னாசியப் பகுதிகளில் வசிக்கக்கூடிய பூனைக் கண் பாம்பு என அழைக்கப்படும் நீரில் வாழக்கூடிய பாம்பானது இதற்கு மாறானது.

மிகவும் மென்மையான உணவுகளையே உட்கொள்ளும்.

இதனால் சதுப்பு நிலம் போன்ற பகுதிகளிலேயே அதிகமாக வசிக்கும்.

எனினும் முதன் முறையாக இதன் வழமைக்கு மாறான மற்றுமொரு இயல்பினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது கடினமான உணவுகளையும் சிறிது காலம் வைத்து அழுகலடையச் செய்த பின்னர் உணவாகக் கொள்ளுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இவை சதுப்பு நிலத்தில் மாத்திரமன்றி ஏனைய பகுதிகளிலும் வசிக்கக்கூடியன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gerarda prevostiana எனும் இனத்தைச் சேர்ந்த இப் பாம்பின் இவ் இயல்பு தொடர்பில் Cincinnati பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான ஆதார வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்