அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட கரடிகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படக்கூடிய சாத்தியம்

Report Print Givitharan Givitharan in இயற்கை

கிட்டத்தட்ட 25,000 வருடங்களுக்கு முன்னர், பாரிய பனிப்பொழிவுக் காலப்பகுதியில் Ursus Spelaeus Complex எனப்படும் குகைக் கரடிகளின் குடித்தொகை படிப்படியாகக் குறைந்து முற்றாக அழிந்தே போயிருந்தது.

ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்றில் இக் கரடியின் DNA தற்போதும் உயிர்ப்புடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது Ursus Arctos எனப்படும் தற்போதைய மண்ணிற கரடியின் DNAயின் 0.9 - 2.4 வீதமானது பண்டைய குகைக் கரடியிலிருந்து வருவிக்கப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னர் உயிரினங்களின் அழிவானது அவ்வினத்தின் முடிவு எனக் கருதப்பட்டிருந்தது.

மேலும் முன்னர் இனம் என்பது அங்கிகளின் இனப்பெருக்க தன்மையின் அடிப்படையிலேயே வரையறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers