அந்தாட்டிக்கா சமுத்திரத்தில் நாசா கண்டுபிடித்த இயற்கையின் அதிசயம்

Report Print Givitharan Givitharan in இயற்கை

அந்தாட்டிக்கா சமுத்திரப் பகுதியானது பனிக்கட்டிகள் நிறைந்தாகவே எப்போதும் காணப்படும்.

எனினும் தற்போது விரைவாக அதிகரித்து வரும் பூகோள வெப்பமடைதல் காரணமாக அங்குள்ள பனிக்கட்டிகள் தீவிர கதியில் உருகி வருகின்றன.

இப்படியிருக்கையில் இயற்கையின் அதிசயம் ஒன்றினை நாசா விண்வெளி ஆய்வு மையம் அப்பகுதியில் கண்டுபிடித்துள்ளது.

அதாவது செவ்வக வடிவிலானதும், தனியாகவும் காணப்படக்கூடியதுமான இராட்சத பனிக்கட்டி ஒன்றினை கண்டுபிடித்துள்ளது.

இப் பனிக்கட்டியானது மிகவும் நேர்த்தியான செவ்வக வடிவில் காணப்படுவது ஆராய்ச்சியாளர்களை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அனேகமானவர்கள் இது பொய்யான புகைப்படம் என தெரிவிக்கின்ற போதிலும் நாசா நிறுவனம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறித்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...