கொள்ளை அழகுடன் ரம்மியமாய் காட்சி தரும் சொக்லேட் குன்றுகள்

Report Print Gokulan Gokulan in இயற்கை

மனிதரின் கண்களுக்கு ரம்மியமான விருந்தாக அமைகின்றது இயற்கை வளங்கள். இப்படி இயற்கையான வளங்களை அதிசயங்கள் என்று சொல்கிறோம்.

அப்படிப்பட்ட அதிசயம் ஒன்று பிலிப்பைன்ஸ் நாட்டில் போஹோல் என்னுமிடத்தில் இருக்கின்றது.

இங்கு சிறிது சிறிதாக ஏறக்குறைய 1800 மலைக்குன்றுகள் இருக்கின்றன இவை மற்ற மலைக்குன்றுகளைப் போலல்லாமல் வித்தியாசமான உச்சிகளைக் கொண்டதாக இருக்கின்றன.

உச்சிகள் கூராக இல்லாமல் முட்டை வடிவத்தில் வழவழவென்று காட்சியளிக்கிறது. இந்த மரங்கள் சொக்லேட் நிறத்தில் உள்ளதுதான் இக் குன்றுகளின் சிறப்பம்.

இந்த மலைப்பிரதேசம் அனைத்தும் பாறைகளால் ஆனவை அல்ல! எரிமலைக் குழம்பாலும் சாம்பலாலும் உருவாகின.

சாதாரணமாக பழுப்பு நிறத்தில் சொக்லேட்களை ஆங்காங்கே ஊற்றி வைத்தது போலக் காட்சியளிப்பதால் இந்த மலைக்குன்றுகள் பனிக்காலங்களில் தன் நிலையை அப்படியே மாற்றிக்கொள்கின்றன.

அந்தச் சமயத்தில் பசுமையான மரம் செடி கொடிகள் வளர்ந்து குன்றுகளை அப்படியே மூடிக் கொள்கின்றன.

அப்போது பார்க்கும்போது நம் கண்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது. பச்சைப் பசேலென்று போர்வை போர்த்தியது போல இருக்கும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.

கோடை காலத்தில் கடுமையான வெப்பத்தால் இலைகள் எல்லாம் காய்ந்து போய் பழுப்பு நிறங்களில் மாறிவிடுகின்றன.

அப்போது இந்த மலைகளைப் பார்த்தாலும் தனி அழகாகத் தெரிகின்றது! சொக்லேட்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆங்காங்கே ஊற்றி வைத்தது போல காட்சியளிக்கிறது.

இதை பார்ப்பதற்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...