ராஜ நாகம் மட்டுமல்ல, விரியன் தாக்கினால் உடனே மரணம்!

Report Print Gokulan Gokulan in இயற்கை

'விதி முடிந்தவனைத்தான் விரியன் கடிக்கும்'' என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு இப்பாம்பில் கொடிய நஞ்சு உள்ளது. இப்பாம்பின் விஷம் நேரடியாக மனிதனின் நரம்புமண்டலத்தை பாதிக்கும். நுரையீரலையும், இருதயத்தையும் உடனடியாக பாதித்து மூச்சு மண்டலத்தை செயலிழக்க செய்யும் திறன் கொண்டது.

இப்பாம்பின் உடம்பில் வரிசையாக வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் கட்டு வளையல்கள் போட்டது போல் இருக்கும். அதனால் இதற்கு ''கட்டுவிரியன்'' என்று வந்தது.

கட்டுவிரியன் பாம்பின் விஷம் நல்ல பாம்பின் விஷத்தைவிட பதினாறு மடங்கு அதிகம்.

தமிழில் இதை பொதுவாக கட்டுவிரியன் என்று அழைத்தாலும் வளையங்களின் நிறத்தைப் பொறுத்து இதை இரு பிரிவுகளாக பிரிக்கின்றனர். வெள்ளை - கருப்பு நிற வளையங்களை கொண்ட விரியன் பாம்பை Common Indian Krait. என்றும், மஞ்சள் - கருப்பு நிற வளையங்களை கொண்ட விரியன் பாம்பை Banded Krait என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர்.

பாகிஸ்தான், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் கட்டுவிரியன் பாம்புகள் காணப்படுகின்றன. இதன் உடல் அமைப்பு கருநீலம் கலந்த சாம்பல் அல்லது நீலம் கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். 3 அடி முதல் 4 அடி நீளம் வரை வளரக்கூடியது.

கழுத்தைவிட கொஞ்சம் பெரியதான முக்கோணவடிவ தலையினை கொண்டது. இதன் முதுகுப்பகுதி நெடுகிலும் அறுகோண வடிவிலான செதில்கள் கொண்டிருக்கும். ஆண் பாம்பு பெண் பாம்பைவிட பெரியதாகவும் நீளமான வாலினை கொண்டதாக காணப்படுகிறது.

வயல்வெளிகள், நீர்நிலைகள், கரையான் புற்று, எலிவளை, பாழடைந்த பகுதிகள்.

இப்பாம்பு இரவில் மட்டும்தான் உணவை வேட்டையாடும். கட்டுவிரியனுக்கு பல்லி, எலி, தவளை போன்ற சில வகை பாலூட்டி உயிரினங்களை சாப்பிடும். சில நேரங்களில் கட்டுவிரியனுக்கு பசி எடுத்தால் தன் குட்டிகளையே அது சாப்பிட்டு விடும்.

இது மிகவும் ஆபத்தான குணநலன்களை கொண்ட பாம்பு. மற்ற பாம்புகள் பகலில் இரை தேடும். ஆனால் கட்டுவிரியன் மட்டும் கொஞ்சம் வித்தியமானது. பகல் நேரங்களில் ஓய்வு எடுக்கும். இரவு நேரங்களில் மட்டும் தான் உணவு தேடும். இரவு நேரத்தில் யாராவது தெரியாமல் இப்பாம்பை சீண்டிவிட்டால் உடனே தாக்கிவிடும்.

கொடிய விஷம் கொண்ட பட்டியலில் ராஜ நாகம் மட்டுமல்ல, விரியன் பாம்புகளுக்கும் முக்கியமான இடம் இருக்கிறது. அதிக உஷ்ணத்தைத் இம்பாம்புகள் தாங்கக்கூடியவை.

இவை, நீர்நிலைகளுக்கு அருகிலேயே பெரும்பாலும் வசிக்கும். பொதுவாக ஆண் விரியன் பாம்புகள் தங்கள் எல்லைக்குள் மற்ற பாம்புகள் நுழைவதை அனுமதிக்காது. யாராவது இப்பாம்பை சீண்டிவிட்டால் உடனே தன் தலையைப் பாதுகாப்பாக வைத்து, உடலைப் பந்துபோல சுருட்டிக் கொள்ளும்.

கட்டுவிரியன் பாம்புக்கடியினால் அதிகமானோர் இறந்துள்ளனர். அதிக உயிரிழப்புகள் நிகழ்வதற்கு விரியன்கள்தான் முக்கியமான காரணமாகவும் திகழ்கிறது.

இரவில் மனிதர்கள் நடமாடுகின்ற பகுதிகளில்கூட இந்தப் பாம்புகள் நிறைய காணப்படலாம். மனிதர்களின் கால்தட அதிர்வினை உணர்ந்து, தீண்டுவதற்கு தனது தலையினைத் தயார்ப்படுத்திக்கொள்ளும். அதன் தலைக்கு அருகில் மனிதக் கால் பதிகின்றபோது மிக ஆக்ரோசமாக கொத்திவிடும்.

பாம்புகள் எதுவுமே யாரையும் தேடிச் சென்று கடிக்காது. தான் சீண்டப்படும்போதோ அல்லது தனது வழியில் யாராவது குறுக்கிடும்போதோதான் பாம்பு தன்னை மூர்க்கத்தனமான பிராணியாக மாற்றிக்கொள்கின்றன. இயற்கை உயிர்வாழ்தலில் அந்த மூர்க்கமானது பாம்பின் வாழ்வாதார நிலைகளில் முக்கியமான ஒன்றாகும்.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்