வெள்ளை யானை எங்கு உள்ளது தெரியுமா?

Report Print Gokulan Gokulan in இயற்கை

நம் தாத்தா பாட்டி வெள்ளை யானை பற்றி கதைகள் நிறைய சொல்வார்கள். ஆனால் நம் இந்திய நாட்டில் கருப்பு யானையைத் தான் நாம் பார்த்திருக்கிறோம். உண்மையாகவே வெள்ளை யானை ஒன்று இருக்கிறதா என்று நாம் நினைத்ததுண்டு.

ஆனால் உண்மையிலேயே வெள்ளை யானை இருக்கிறது. வெள்ளை யானையின் வெள்ளை நிறத்தில் இருக்காது. சற்று இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இது ஒரு அரிய வகை யானைகள்.

இந்த யானைகளிடமிருந்து யாரும் எந்த வேலையையும் வாங்க மாட்டார்கள். ஆனால், அதை வளர்ப்பதற்கு நிறைய செலவாகும். கெளரவத்துக்காகவும், பெருமைக்காகவும் இந்த வெள்ளை யானைகள் வளர்க்கப்படுகின்றன. இந்த வெள்ளை யானைகளை வளர்த்தால் நம்மை எல்லோரும் பெருமையாக பேசுவார்கள் என்பதற்காக இதை வளர்க்கின்றனர்.

உலகில் வெள்ளை யானைகள் அதிகம் காணப்படும் நாடு தாய்லாந்து. அதனாலே தாய்லாந்தை வெள்ளை யானைகளின் தேசம் என்று அழைக்கப்படுகிறது.

தாய்லாந்து மக்கள் வெள்ளை யானையைப் புனிதமாகக் கருதுகின்றனர். வெள்ளை யானைகளுக்கு தங்கத் தட்டில் தான் உணவளிக்கப்படுகிறது. மேலும் அரசருக்குரிய அனைத்து வசதிகளும் இந்த வெள்ளை யானைகளுக்கு செய்கின்றனர்.

புதிதாக யாராவது வெள்ளை யானைகளை கண்டுபிடித்தால் அவர்களுக்கு அரசு வரிச் சலுகைகளை அளித்து, அரசு லங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.

தாய்லாந்து நாட்டின் மேம்பாட்டுத் தந்தை என்று அழைக்கப்படும் மொங்குட் அரசரின் தலைமையில் வடிவமைக்கப்பட்ட தாய்லாந்தின் முதல் தேசியக்கொடியில் வெள்ளை யானையின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சயாம் நாட்டு (இன்றைய தாய்லாந்து) அரசர் ஒருவர் தனது அதிகாரிகள் யாராவது தவறு செய்துவிட்டால் அவர்களுக்கு வெள்ளை யானை ஒன்றை பரிசளித்து விடுவாராம் .

ஏன்னா வெள்ளையானையை வளர்ப்பது மிகவும் கடினம். அதற்கு நிறைய செலவாகும். அதனால் மன்னர் தந்த பரிசு என்பதால் அதனை நிராகரித்து விடவும் முடியாமல் அவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். இது சயாம் மன்னர் அளித்து வந்த நூதன தண்டனை என்று சொல்லப்படுகிறது.

நம்ம ஊர் திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு வெள்ளை யானை வீதியுலா விமரிசையாக நடைபெறும். கடவுளை வணங்குவதோடு அல்லாமல், வெள்ளை யானையை பார்ப்பதற்கு பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கயிலாய மலையில் சிவபெருமான் வெள்ளை யானை உருவத்தில் காட்சி அளித்தார் என்று கூறப்படுகிறது.

இதனால் ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் கடவுளை போற்றும் விதமாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடை திறக்கப்பட்டு, பிறகு விஸ்வரூப தரிசனம் நடைபெறும்.

அன்று கோயிலில் வெள்ளை யானையின் உடல் முழுவதும் திருநீறு பூசப்படும். வெள்ளை நிறத்தில் யானையும், தங்கச் சப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் கோயிலில் இருந்து புறப்பட்டு தெரு தெருவாக வீதி உலா வந்து மீண்டும் கோயிலை வந்தடையும். இந்த விழாவை மக்கள் விமரிசையாக, கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்