வீட்டுப்பூனைக்கும், காட்டுப்பூனைக்கும் உள்ள வித்தியாசம்

Report Print Gokulan Gokulan in இயற்கை

பூனைகளை நாம் வீட்டில் வளர்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் காட்டு பூனை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் மிகுந்த கவலையடையக் கூடிய விஷயம் இவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது மனிதன் வாழ அருகிலுள்ள புதர்காடுகளை அழித்ததினால் அவைகள் வாழ இடமில்லாமல் இறந்து விட்டன. எஞ்சியவை காப்புக் காடுகளை நோக்கி நகர்ந்துவிட்டன.

காட்டுப்பூனைக்கும் வீட்டுப்பூனைக்கும் வேறுபாடுகள் உண்டு...

வீட்டுபூனைகள்

வீட்டு பூனைகள் சராசரியாக ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்கும். பொதுவாக பூனைகள், ஒரு உணவை மூன்று முறை ருசித்து சோதனை பார்த்த பின்புதான் நான்காவது முறை நம்பிக்கையுடன் அதனை உண்ணும். பூனைகள் தனது உள்ளங்கால் வழியாக வியர்வையை வெளியேற்றும். அவற்றின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது. வீட்டுப்பூனை தயிர்சாதம், வடையெல்லாம் சாப்பிடும். மனிதனோடு சேர்ந்ததினால் மனிதன் சாப்பிட்டறதை எல்லாவற்றையும் சாப்பிட்டும். சில வசதியான பூனைகள் மனுசனைப்போலவே தொப்பையோடு காணலாம்.

வீட்டு பூனைகள் இனிப்பு பொருட்களை சாப்பிடாது. பெண் பூனைகள் பொதுவாக வலது கால் பழக்கமுடையவை. மேலும் ஆண் பூனை இடது கால் பழக்கம் கொண்டவையாக இருக்கும். பூனைகளுக்கு காலர் எலும்புகள் என்று சொல்லக்கூடிய கழுத்திற்கும் தோலுக்கும் இடையேயான எலும்புகள் கிடையாது. பெண் பூனைகள் மோலி அல்லது ராணி என்று அழைக்கபடும். பூனைகள் கடல் நீரைக்கூட குடிக்கும். அதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவிற்கு திறன் கொண்டது.

காட்டுபூனை

காட்டுபூனை ஆசியா, சீனா, தெற்காசியா, நடு ஆசியா, நைல் பகுதி போன்றவற்றில் காணப்படுகிறது. இந்த காட்டுபூனை இந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது. இந்த காட்டுப் பூனைகளை வெருகு அழைக்கின்றனர்.

வீட்டுப்பூனைகளை விடச் சற்று பெரிதாக இருக்கும் இப்பூனைகள் 55 முதல் 94 செ.மீ நீளம் வரையும் 36 செ.மீ உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. இந்த பூனை12 கிலோ எடை வரை இருக்கும். காட்டுப்பூனைகள் நன்றாக மரம் ஏறும் திறன் கொண்டது.

காட்டுப்பூனை கொறிணிகள், அணில், முயல், தவளை, பறவைகள் முதலியவற்றை வேட்டையாடி உண்ணும். ஊர்ப்புறங்களில் இவை வீட்டில் வளர்க்கப்படும் கோழி, வாத்து ஆகியவற்றையும் வேட்டையாடும்.

இந்தியா முழுவதும் ஒருகாலத்தில் பல பகுதிகளில் காணப்பட்ட இந்த வெருவு காட்டு பூனை இன்று பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மட்டுமே அரிதாகக் காண முடிகிறது...

பல பெரிய உயிரினங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சிறய உயிர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. ஒவ்வொரு உயிரினமும் அதனதன் பங்கிற்கு சூழலியல் செயல்பாட்டை நடத்திக்கொண்டிருக்கிறது. அதில் இதுபோன்ற சிறு வேட்டையாடிகளின் பங்கு மிக மிக அவசியமானது...

இந்தப் பூனைகள் கோழிகளை பிடித்து சாப்பிடுகிறது என்பதற்காகவும், தவறான மூடநம்பிக்கையால் இந்த வகை பூனைகள் கொல்லப்பட்டன.

முயல், எலி மற்றும் அணில், பறவைகள், பாம்பு, தவளை இப்படி கிடைத்ததை எல்லாம் காட்டு பூனைகள் சாப்பிடும். அதன் எடை மற்றும் உருவத்தைவிட சற்று பெரிதானவற்றையும் அடித்து உண்ணும் வேட்டைத் திறன் கொண்டது காட்டு பூனை. காட்டுப்பூனைளில் பல இனங்கள் உண்டு. பாலூட்டிகள் மற்றும் பறவைகளைச் சேர்ந்த 33 இனம் பூனைகளால் அழிந்துவிட்டன. மிகவும் அதிகமாக வேட்டையாடக் கூடிய 100 இனங்களில் பூனையும் ஒன்று. இனிமேலாவது மனிதன் இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து காடுகளை அழிக்காமல் இருந்தால் பல உயிர்கள் இம்மண்ணில் வாழும். இல்லையென்றால் ஒரு நாள் மனித குலம் எதிர்பாராதவிதமாக இயற்கை சீற்றத்தால் அழியும்.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்