இடி, மின்னல் எப்படி உருவாகிறது? இவற்றிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது? அலசுவோம்

Report Print Nalini in இயற்கை
207Shares

இடி மின்னல் காலநிலையின் இரட்டைப் பிறவிகள். மின்னலை ஒளியாகவும், இடியை ஒலியாகவும் அறிகிறோம். ஒளியானது ஒலியைவிட வேகமாகப் பரவுகிறது. எனவேதான் மின்னல் முதலாவதாகவும், இடி இரண்டாவதாகவும் நம்மை அடைகிறது.

மின்னல்

மின்னல் என்பது மழைக் காலங்களில் திரண்ட கார் மேகங்களின் இடையே ஏற்படும் மிகப்பெரிய தீப்பொறிபோன்ற மின் பொறிக் கீற்றல். கண்ணைப்பறிக்கும் ஒளிவீச்சோடு, கோடுகளாய் வானில் கிளைத்து நொடிப்பொழுதில் தோன்றி மறையும் நிகழ்ச்சி தான் மின்னல்.

மின்னூட்டம் பெற்ற இருபொருட்களுக்கிடையே மின்னோட்டம் ஏற்படுவதாலேயே இது உண்டாகிறது. இடி மழையின்போது பெரும் மேகங்கள், மின்னூட்டம் பெறுகின்றன.

இடி

இடி காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள் உராய்வதால் வானத்தில் மின்சாரம் உண்டாகிப் பூமியில் பாயும்போது உண்டாகிறது.

இடி, மின்னல் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும். சிறிது நேரம் கழித்து இடியொலி கேட்கும். ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 300000 கிலோமீட்டர் தூரமும்; ஒலியின் வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் தூரமும் கேட்கும்.

இரண்டு மூலப்பொருள்கள் ஒன்றோடு ஒன்று உராய்வதாலும் மின்சாரம் உற்பத்தி கிடைக்கும். நமது உடலில் 18 வகையான மூலப்பொருள்கள் உள்ளன. ஆகவே நமது கைகளை ஒன்றோடு ஒன்று தேய்க்கும் போது எலக்ட்ரான்கள் நகர்ந்து மின்சாரம் உண்டாகிறது. ஆகவே நமது கையானது சூடேறுகிறது.

காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள் உராய்வதால் ஆகாயத்தில் மின்சாரம் உண்டாகிறது. இந்த மின்சாரம் பூமியில் பாயும்போது இடிமின்னல் உண்டாகிறது.

மின்சாரம், உயரமான மரங்கள், கட்டிடங்கள் மூலமாக பூமிக்கு பாய்ந்து செல்வதால் மரங்கள் எரிந்து விடுகின்றது. கட்டிடங்கள் இடிந்து விடுகின்றன. உயரமான பொருள் எதுவும் கிடைக்காத போது நமது தலையில் விழுந்துவிடும். ஆகவே பரந்த வெட்ட வெளியில் தனியாக செல்லக் கூடாது. தனியாக உள்ள மரத்தின் அடியில் நிற்க கூடாது.

உயரமான கட்டிடங்களின் மீது தடித்த கம்பிகளை பொருத்தி அதை பூமியுடன் இனைப்பு ஏற்படுத்தி எர்த் செய்து விடுவார்கள். கட்டிடத்தை இடி மின்சாரம் தாக்கும் போது மின்சாரம் வேகமாக பூமிக்கு சென்றுவிடும். அப்போது கட்டிடம் பதுகாப்பாக இருக்கும். கட்டிடத்தின் மீது அமைக்கப்படும் அந்த தடித்த கம்பிக்குப் பெயர் இடிதாங்கி எனப்படும்.

இடி மின்னலில் உண்டாகும் மின்சாரம் பல லட்சக்கணக்கான வோல்டு அழுத்தமுள்ளதாக இருக்கும். ஆகவே இதன் தாக்குதல் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.

மின்னல், இடியிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

  • இடி, மின்னல் தாக்கும் போது கான்கிரீட் கூரையிலான கட்டிடம், உலோகத்தால் மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சமடைய வேண்டும்.
  • குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிழற்குடையின் கீழோ நிற்கக்கூடாது.
  • தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு விலக வேண்டும்.
  • டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி, அலைபேசி பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உபயோகத்தில் இல்லாத போது சுவிட்சுகளை அணைத்து வைக்க வேண்டும்.
  • மின்வாரியத்தின் மின்மாற்றிகள், துணை மின்நிலையத்துக்கு போடப்பட்டுள்ள வேலி அருகே சிறுநீர் கழிப்பதையும் அருகே செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
  • மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • மின்கம்பங்கள், அவற்றைத் தாங்கும் கம்பி களை தொடுவதையும் மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டுவதையும் தவிர்க்கவேண்டும்.
  • மின்சார வயர்கள் பதிக்கப்பட்டுள்ள சுவர்களில் ஆணி அடிக்க வேண்டாம்.
  • மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும். அந்தத் தீயை தண்ணீர் கொண்டு அணைக்கக் கூடாது.
  • உலர்ந்த மணல், உலர்ந்த ரசாயனப் பொடி, கரியமில வாயு தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்