7 காதலர்களை ஏமாற்றி 3 காதலர்களை கொலை செய்த பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Report Print Jeslin Jeslin in ஏனைய நாடுகள்

ஜப்பான் நாட்டில் பணத்திற்காக ஆசைப்பட்டு தனது மூன்று காதலர்களை விஷம் வைத்து கொலை செய்த பெண் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

ஜப்பானின் கியோட்டா பகுதியில் வசிக்கும் 70 வயதான சிசாக்கோ ககெகி என்ற பெண்ணுக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் பணத்திற்காக ஆசைப்பட்டு தனது வயதுக்கு ஒத்த பணக்கார ஆண்களை காதலிப்பதாக நடித்து அவர்களது காப்பீடு தொகை மற்றும் சொத்து வாரிசுரிமையையும் கைப்பற்றியுள்ளார்.

இதுவரை மூன்று நபர்களை காதலிப்பதாக நடித்து அவர்களது சொத்துக்களைக் கைப்பற்றிய பின்னர் விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ளார் என தெரியவருகின்றது.

நான்காவது நபரிடம் இவ்வாறு நடந்துக்கொள்ள முற்பட்ட வேளையில் இவரை் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

குறித்த பெண் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை ஏழு நபர்களை காதலித்து உள்ளார். தற்போது அந்த 7 காதலர்களும் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் இல்லை என குறிப்பிடப்படுகின்றது.

காதலர்களின் பணத்தை சொந்தமாக்கிய பின்னர் குறித்த 7 காதலர்களையும் விஷம் கொடுத்துக் கொலை செய்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பெண்ணை அந்த நாட்டு மக்கள் கறுப்பு விதவை என அடையாளப்படுத்துகின்றனர், இதுவரை இவர் நான்கு தடவை திருமணம் செய்துள்ளாராம்.

சுமார் 6.6 மில்லியன் பவுண்ட் தொகை அளவுக்கு காதலர்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் மூன்று கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள இவர் வெகுவிரைவில் தூக்கிலிடப்படுவார் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers