’பனாமா பேப்பர்ஸ்’ அலுவலகங்களில் பொலிஸ் அதிரடி சோதனை

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
’பனாமா பேப்பர்ஸ்’ அலுவலகங்களில் பொலிஸ் அதிரடி சோதனை

சர்வேத அளவில் பனாமா ஆவணங்களை கசியவிட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய Mossack Fonseca என்ற நிறுவன அலுவலகங்களில் பொலிசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய புள்ளிகளின் ரகசிய முதலீடுகள் மற்றும் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்களை பனாமா நாட்டில் உள்ள MossackFonseca என்ற நிறுவனம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆவணங்கள் வெளியாகி 10 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய சட்ட அலுவலங்களில் இரண்டாவது நாளாக பொலிசார் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக நடத்திய தேடுதல் வேட்டையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது.

Mossack Fonseca நிறுவனத்திலும் விசாரணை அதிகாரிகள் அண்மையில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனை குறித்து விசாரணை அதிகாரியான KeniaPorcell என்பவர் பேசியபோது, ’ Mossack Fonseca நிறுவனத்தில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்ற தகவலை தற்போது வெளியிடுவது சரியாக இருக்காது.

ஆனால், விசாரணை சரியான திசையை நோக்கி தான் சென்றுக்கொண்டு இருப்பதாக’ அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் வெளியான பிறகு சுமார் 30 அமைப்புகள் ஒன்று திரண்டு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி Mossack Fonseca நிறுவனத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments