வீடியோவில் தோன்றிய போகோஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள்!

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
வீடியோவில் தோன்றிய  போகோஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள்!

நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகளால்கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என நம்பிக்கை ஏற்படுத்தும்விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்14 ஆம் திகதி நைஜீரியாவின் சிபோக் நகரில் உள்ள அரசாங்க பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இருந்து பள்ளி மாணவிகளை போகோஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.

இந்த சம்பவம் மூலம், உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத் தீவிரவாதிகள், தாங்கள் கடத்தி சென்ற மாணவிகளை தற்கொலைப்படைதாக்குதலுக்கும், பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தினர்.

இதில் பல மாணவிகள் தப்பித்து வந்தவிட்டபோதிலும், 219 மாணவிகளின் நிலை என்ன என்பதுகுறித்த மர்மமாகவே இருந்தது.

நைஜீரிய இராணுவீரர்களும் மாணவிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வந்த போதிலும், எந்த முடிவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அம்மாணவிகள் உயிருடன்,நன்றாக தான் இருக்கிறார்கள் என நம்பிக்கை அளிக்கும்விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

CNN ஊடகத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், உங்களுடைய பெயர் என்ன? எந்த பள்ளியில் படித்தீர்கள்?மற்றும் எங்கு இருந்து கடத்தப்பட்டீர்கள்? என்ற கேள்வி கேட்கப்படுகிறது.

அதற்கு அம்மாணவிகளும் அவர்களுடைய பெயர்கள் மற்றும் பள்ளியின் பெயரை சொல்லி செல்கிறார்கள், சுமார் 2 நிமிடம் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் ஒரு சில மாணவிகள் மட்டுமே வந்து செல்கின்றனர்.

இதில் கடைசியாக வரும் NaomiZakaria என்ற மாணவி, இந்த வீடியோவை யாரெல்லாம் பார்க்கிறீர்களோ, அவர்கள் எங்கள் குடும்பத்துடன் நாங்கள் மீண்டும் இணைய உதவி செய்யுங்கள் எனக்கூறுகிறார்.

இவர்கள் அனைவரும், சிபோக்கோவில்உள்ள நைஜீரிய பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட மாணவிகள் ஆவர், தற்போது இந்த வீடியோவை பார்த்த நைஜீரிய அரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சர்Lai Mohammed, இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ளார்.

மேலும், இந்த வீடியோவை பார்த்த பள்ளி மாணவிகளின் பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளை எப்படியாவது மீட்டுத்தாருங்கள் எனக் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments