14-வது மாடியிலிருந்து குதித்து உயிர்பிழைத்த அதிசய சிறுவன்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
14-வது மாடியிலிருந்து குதித்து உயிர்பிழைத்த அதிசய சிறுவன்

ரஷ்யா நாட்டில் சிறுவன் ஒருவன் 14 அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு ரஷ்யாவில் உள்ள Krasnodar என்ற நகரில் Ilya என்ற 15 வயது சிறுவன் தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.

மது பழக்கமே இல்லாத இந்த சிறுவன் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று மது அருந்துவிட்டு போதையில் தள்ளாடியவாறு வீட்டிற்கு வந்துள்ளார்.

மகனின் நிலையை கண்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்த அவனுடைய பெற்றோர் சிறுவனை அமர வைத்து புத்திமதி கூறியுள்ளனர்.

பெற்றோரின் வார்த்தைகளால் மனக்காயமுற்ற அந்த சிறுவன் கவலையோடு அன்று இரவு படுக்கைக்கு சென்றுள்ளார்.

மறுநாள் காலை பள்ளிக்கு சென்றுவிட்டு சீக்கிரமாகவே வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு திரும்பிய சிறுவன் பெற்றோரையும் சந்திக்காமல் நேராக 14-வது தளத்தில் இருந்த கூரை மீது ஏறி தனது கைகளை வெட்ட முயற்சி செய்துள்ளார்.

பின்னர், ரத்தக் காயங்களுடன் அங்கிருந்து தரையை நோக்கி குதித்து விடுகிறார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக குறுக்கே இருந்த ஒரு கயிற்றில் மோதி வேகம் குறைந்து தரையில் நின்றுருந்த கார் மீது விழுந்து விடுகிறார்.

இந்த காட்சியை கண்ட பொதுமக்கள் விரைந்து சென்று அவரை தூக்கி ‘என்ன நடந்தது?’ எனக் கேட்டுள்ளனர்.

’தற்கொலை செய்துக்கொள்ள நான் தான் மேலே இருந்து குதித்தேன்’ என முனகியவாறு கூறிவிட்டு மயக்கமாகியுள்ளார்.

இந்த சம்பவம் அறிந்த பெற்றோர் சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிறுவனுக்கு தொடை எழும்பு மட்டும் முறிந்துள்ளது. மற்றப்படி, அவருக்கு எந்த ஆபத்தான காயமும் ஏற்படவில்லை.

இது குறித்து மருத்துவர்கள் பேசியபோது, ’14-வது மாடியில் இருந்து குதித்து உயிர் பிழைத்துள்ளது உண்மையில் ஒரு அதிசயமான நிகழ்வு. எனினும், சிறுவனுக்கு இப்போது ஆபத்தான நிலை இல்லாததால் அவன் விரைவில் குணமாகி வீடு திரும்பிவிடுவார்’ என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments