பேஸ்புக்கில் மூழ்கிருந்த நபரை பணி நீக்கம் செய்தது சரி தான்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
பேஸ்புக்கில் மூழ்கிருந்த நபரை பணி நீக்கம் செய்தது சரி தான்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அலுவலக நேரத்தில் பேஸ்புக்கில் மூழ்கியிருந்த ஊழியரை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது சரியான நடவடிக்கை தான் என இத்தாலி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இத்தாலி நாட்டில் பெயர் வெளியிடப்படாத நிறுவனம் ஒன்றில் நபர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார்.

அலுவலகத்தில் பணியில் இருந்த நேரத்தில் அவர் அடிக்கடி பேஸ்புக்கில் நேரத்தை செலவிட்டதால் அவரை அதிரடியாக நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது.

நிறுவனத்தின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த நபர் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கின் இறுதி வாதம் இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அப்போது நிறுவனத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் முன்னாள் ஊழியரின் விதிமீறல்களை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அதில் ‘பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் சமூக வலைத்தளமான பேஸ்புக்கிற்கு அடிமையானவர். 18 மாதங்களில் அவர் 6,000 முறை அவர் இணையத்தளங்களில் செலவிட்டுள்ளார்.

இதில், 4,500 முறை அவர் பேஸ்புக்கில் செலவிட்டுள்ளார். அதாவது, ஒவ்வொரு நாளும் 16 முறை பேஸ்புக் மற்றும் பிற தளங்களில் நேரத்தை வீணாக செலவிட்டுள்ளார்.

இதனால், அவர் அலுவலகத்திற்காக பணியாற்ற வேண்டிய நேரத்தில் 3 மணி நேரம் சமூக வலைத்தளங்களிலேயே செலவிட்டுள்ளார்.

ஊழியரின் இப்பொறுப்பற்ற நடவடிக்கையால் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது’ என வாதாடியுள்ளார்.

வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி, ‘அலுவலக நேரத்தில் அடிக்கடி பேஸ்புக்கில் நேரத்தை செலவிட்ட குற்றத்திற்காக அவரை நிறுவனம் பணி நீக்கம் செய்தது சரி தான்’ என தீர்ப்பளித்துள்ளது.

மேலும், ஒரு ஊழியரின் தனிப்பட்ட ரகசியங்களை பாதிக்காத வகையில் அலுவலக கணனியில் அவர் என்னென்ன இணையத்தளங்களை பார்க்கிறார் என்பதை கண்காணிக்கவும் நிறுவனத்திற்கு உரிமை இருக்கிறது என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவு

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments