உக்ரேனிய படை வீரர்களினால் உயிருடன் புதைக்கப்பட்ட ரஷ்ய நபர்! பதற வைக்கும் வீடியோ

Report Print Jubilee Jubilee in ஏனைய நாடுகள்

ரஷ்ய பிரிவினைவாதி ஒருவரை உக்ரைன் வீரர்கள் உயிருடன் புதைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் தொலைக்காட்சி ஒன்றில் ரஷ்யாவை சேர்ந்த ஒருவரை உக்ரைன் வீரர்கள் உயிருடன் குழி தோண்டி புதைக்கும் படியான வீடியோ ஒளிப்பரப்பட்டது.

இந்த வீடியோவில் 4 பேர் ஒருவரை தூக்கி ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த குழியில் வீசுகின்றனர். அவர்கள் உக்ரேனிய படை வீரர்களின் உடைகளை அணிந்துள்ளனர்.

அதில் ஒருவர், "அவன் இன்னும் சாகவில்லை” என்று உக்ரைனிய மொழியில் கூறிக் கொண்டிருக்கும் போது மற்றவர்கள் குழியில் இருக்கும் நபரை உயிருடன் புதைக்கின்றனர்.

இந்த வீடியோ ரஷ்யாவின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டதுடன், தற்போது இணையத்திலும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்ய கிளர்ச்சியாளர் ஒருவர் தங்கள் பகுதியில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக ஒருவரை கொடூரமாக சித்ரவதை செய்தார்.

தூணில் அவரை கட்டி வைத்து வயரால் அடித்து துவைத்தார். அதன் பிறகு காணாமலே போன அந்த நபர் பின்னர் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த வீடியோ அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது ரஷ்ய பிரிவினைவாதி ஒருவரை உக்ரைன் வீரர்கள் உயிருடன் புதைக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments