மலைப்பகுதியில் மோதி இராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் உயிரிழப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
மலைப்பகுதியில் மோதி இராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் உயிரிழப்பு

துருக்கி நாட்டின் கிரெசன் மாகாணத்தில் அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் 15 பேருடன் சென்ற இராணுவ ஹெலிகாப்டரானது விபத்துக்குள்ளாகி உள்ளது.

துருக்கி நாட்டின் வடகிழக்கு கிரெசன் மாகாணத்தில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. சிகோர்ஸ்கி என்ற அந்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரமாண மலைப் பகுதியில் மோதி கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹெலிகாப்டரில் சில இராணுவ அதிகாரிகளும் அவர்களின் உறவினர்களும் இருந்துள்ளனர். கருங்கடல் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மெலும் சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம் தெரிவித்துள்ளார்.

இராணுவ அதிகாரிகளுடன் ரமழான் கொண்டாடும் பொருட்டு அதிகாரிகளும் மற்றவர்களும் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு குழுவினரை அனுப்பியுள்ளதாகவும் விபத்தில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 5 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில் எஞ்சியவர்களின் நிலை குறித்து உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments