ரஷ்ய வீரர்கள் இல்லாதது ஒலிம்பிக் போட்டிக்கு தரம் குறைவு: ஜனாதிபதி விளாடிமிர் புடின்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

ஊக்க மருந்து பிரச்சனையில் சிக்கிய 100-க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்காத ஒலிம்பிக் போட்டி தரம் குறைந்து பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 5ஆம் திகதி பிரேசிலில் நடைபெறவிருக்கும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில், Yelena Isinbaeva என்ற முன்னனி வீராங்கனை உட்பட 100க்கும் அதிகமான வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நீளம் தாண்டும் வீராங்கனை Darya Klishina மற்றும் தடகள போட்டியில் ஒரே ஒரு ரஷ்ய வீரர், வீராங்கனை மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியிருப்பதாவது, ஒலிம்பிக்கில் பல்வேறு போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் இடம்பெறாத நிலையை ஏற்படுத்தி விட்டார்கள், இவ்வாறு செய்தது முற்றிலும் பாரபட்சமானது. இதனால் ஒலிம்பிக் போட்டிக்கே தரம் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments