’சந்திரனில் தேசிய கொடியை ஏற்றுவோம்’: வட கொரியா ஜனாதிபதி திட்டவட்டம்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

சந்திரனில் தனது நாட்டின் தேசிய கொடியை ஏற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும், விரைவில் இந்த கனவு நிறைவேறும் என வட கொரியா ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வட கொரியா விஞ்ஞானிகள் குழு இயக்குனரான Hyon Kwang Il என்பவர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் எங்களுடைய நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு பெரிதும் தடையாக இருந்து வருகின்றன.

எனினும், வானவியல் தொடர்பான எங்களது ஆராய்ச்சி தொடரும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் வட கொரியா நாட்டின் தேசிய கொடி பறக்கும்.

மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ராணுவ செயற்கைகோள் அனுப்புவது தொடர்பாக ஆராய்ச்சி செய்யுமாறு ஜனாதிபதி கிம்-யோங் அன் உத்தரவிட்டுள்ளார்’ என அந்த இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வட கொரியா கடந்த பெப்ரவரி 7ம் திகதி Kwangmyongsong 4 என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது.

எனினும், அந்த செயற்கைகோளில் இருந்து தகவல்கள் பூமிக்கு வருகின்றனவா என்பது குறித்து அந்நாட்டு விஞ்ஞானிகள் எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments