இடுப்பில் வெடிகுண்டுடன் உலாவிய குட்டித்தீவிரவாதி: கைது செய்யப்பட்ட பரபரப்பு காட்சிகள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
1072Shares
1072Shares
ibctamil.com

துருக்கியில் நேற்று முன்தினம் திருமணவிழாவின் போது நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு 12-14 வயது சிறுவனை ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மற்றொரு 12 வயது மதிக்கத்தக்க தற்கொலைப்படை சிறுவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.

துருக்கி எல்லையில் அமைந்துள்ள காசியந்தெப் நகரில் நடந்த திருமண நிகழ்ச்சியில், 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில், 51 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பாக்தாத்தில் உள்ள Kirkuk நகரில் 12 வயது சிறுவன் தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு உலாவிய நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

இச்சிறுவன் அப்பகுதியில் உள்ள ஷியா மசூதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது, இவன் அணிந்திருந்த ஆடையின் பின்புறம் அர்ஜெண்டினா வீரரான மெஸ்ஸியின் சீருடை போன்றும், முன்புறம் கருப்பு நிறத்திலும் இருந்துள்ளது.

இவனது இடுப்பில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகளை பொலிசார் செயலிழக்க செய்யும் காட்சிகள் மற்றும் இவனை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச்செல்லும் காட்சிகள் அடங்கிய பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments